அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்!
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
1949-ம் ஆண்டு இதே நாளில் இந்திய அரசியலமைப்பு சட்டம் அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்கப்பட்டதை நினைவுகூரும் விதமாக இது கொண்டாடப்படுகிறது.
1949 நவம்பர் 26-ல் ஏற்கப்பட்ட இந்த அரசியலமைப்பு சட்டம், 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. அது குடியரசு தினமாக கொண்டாப்படுகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய் அரசியலமைப்பு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் இந்திய அரசியலமைப்பு நாளான இந்நாளில், இச்சட்டத்தை உருவாக்கியதில் அரும்பங்காற்றிய தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்!
ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.