மக்களவையில் 251 எம்பிக்கள் ஆதரவுடன் தொகுதி மறுவரையறையோடு இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
மசோதாக்களை மக்களவையில் அறிமுகம் செய்ய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 251 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில் 185 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் மத்திய அரசு கொண்டுவந்த 3 மசோதாக்களும் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிரான போராட்டத்தை ராகுல் வழிநடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக எம்பிக்கள் செயல்படுவார்கள் எனவும் முதலமைச்சர் பேசியதாக கூறப்படுகிறது.