தமிழக செய்திகள்

விவசாயிகள் நலனில் முதலமைச்சருடன் காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்- அமைச்சர் ராஜேஷ்குமார்

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாள் அமர்வு தொடங்கியது.

மேகதாது அணை தொடர்பான அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், சுற்​றுலாத்​ துறை அமைச்​சருமான எஸ்​.​ராஜேஷ்கு​மார் உரையாற்றினார்.

அப்போது அவர்,"தமிழக விவசாயிகள் நலனுக்காக முதலமைச்சர் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழக காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.

தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை மூன்று வழிகளில் கர்நாடகா வழங்க வேண்டும்" என்றார்.