நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள த.வெ.க. ஆட்சி அமைக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், அவர்களின் கைப் பாவையாக செயல்படும் கவர்னரை கண்டித்தும், சென்னை அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகே இன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இன்னும் சற்று நேரத்தில் காங்கிரசார் ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்த உள்ள நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.