நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான ஆதரவை பெற த.வெ.க.வினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும்படி த.வெ.க. கேட்டதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, த.வெ.க.விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாகவும் இதில் பெரும்பாலானோர் த.வெ.க.விற்கு ஆதரவு அளிக்கலாம் என தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயை சந்திக்க காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றே விஜயை சந்தித்து த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க காங்கிரஸ் முடிவு என்றும் கூறப்படுகிறது. மேலும், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து த.வெ.க.- காங்கிரஸ் தலைமை பேசி முடிவெடுக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, டெல்லி தலைமையிடம் ஆலோசனை நடத்த சென்ற காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று மீண்டும் சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.