தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாததால் பிற கட்சிகளுடன் தவெக ஆதரவு கோரி வருகிறது. காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைத்த நிலையில் இன்னும் 6 தொகுதிகள் தேவைப்படுகிறது.
இதற்கிடையே, தனிப்பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்க ஆளுநர் தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்காததை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு மக்களின் தீர்ப்பை சிதைக்க யாருக்கும் உரிமை இல்லை என காமராஜர் பேசுவதுபோன்ற ஏ.ஐ வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.