காங்கிரசார் போராட்டம்  
தமிழக செய்திகள்

ராகுல், பிரியங்கா காந்தி கைதுக்கு எதிர்ப்பு- டெல்லியில் காங்கிரசார் போராட்டம்

காங்கிரசார் நடத்திய தர்ணா போராட்டத்தின் போது மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மோந்திர பிரதான் பதவி விலக கோரி நேற்று டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

தடியடி

போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய விவகாரத்தில் பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி பிரதமர் இல்லத்தின் முன்பு காங்கிரசார் நடத்திய தர்ணா போராட்டத்தின் போது மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைது

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை கைது செய்ததை கண்டித்தும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இன்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜய் வசந்த்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற குழு பொருளாளரும், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டார்.