தமிழக செய்திகள்

வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரம் குறிப்பிடவில்லை..!- ஆதவ் அர்ஜூனா மீது புகார்

தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும், முறையாக பரிசீலிக்காமல் நிராகரித்துவிட்டனர்.

தேர்தல் வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக புகார் எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தக்கோரி வில்லிவாக்கம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் தேவராஜன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆதவ் அர்ஜூனாவின் வேட்பு மனுவில், அவரது மனைவியின் சொத்துக்களை குறிப்பிடாமல் மறைத்துள்ளார்.

வேட்புமனு பரிசீலனையின்போது தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும், முறையாக பரிசீலிக்காமல் நிராகரித்துவிட்டனர்.

தனது புகாரை நிராகரித்து தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.