தமிழக செய்திகள்

மின் கொள்முதலில் ஊழல் குற்றச்சாட்டு என்பது அரைவேக்காட்டுத்தனம்..!- அமைச்சர் நிர்மல் குமார்

உப்பூர் மின் நிலையத்தில் மின் உற்பத்தியை செய்வதற்கான நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

திமுக தரப்பில் பல பொய் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் மின் கொள்முதலுக்கு தனி சிறப்பு திட்டம்.

3500 என அறிவித்த நிலையில் 1000 மெகாவாட் மட்டும் தான் கொள்முதல் செய்ய உள்ளோம்.

கடந்தாண்டைவிட 5000 மெகாவாட் கூடுதலாக உள்ள மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக மின்சாரம் கொள்முதல்.

பீக் ஹவர்ஸூக்கான தேவையில் 1000 மெகாவாட் அளவுக்கு தான் மின்சாரம் கொள்முதல் செய்யப்போகிறோம்.

மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரைக்கான மின் கொள்முதலுக்கு ஒரு நாளைக்கு ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை செலவு.

யூனிட் தெர்மல் மின் உற்பபத்திற்கு ரூ.17 செலவு, கேஸ் பவர் மின்சாரத்திற்கு உற்பத்திக்கே ரூ.30 வரை ஆகும்.

ஆந்திரா, மகாராஷ்டிராவில் ஒரு வாரமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படாமல் காக்கிறோம்.

மற்ற மாநிலங்களில் மின்வெட்டு உள்ள நிலையிலும் மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால் இங்கு மின்வெட்டு இல்லை.

மத்திய அரசின் நிறுவனங்களிடம் இருந்து தான் தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மாநிலங்கள் மின்கொள்முதல் செய்கிறது.

உப்பூர் மின் நிலையத்தில் ரூ.6000 கோடி வரை முதலீடு செய்துவிட்டு அப்படியே சென்றுவிட்டது திமுக அரசு.

உப்பூர் மின் நிலையத்தில் மின் உற்பத்தியை செய்வதற்கான நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

5300 மெகாவாட்தான் நமது மாநில சொந்த உற்பத்தி, மீதம் சோலார், காற்றாலை, தெர்மல் என வெளியிலிருந்து தான் வாங்குகிறோம்.

சொந்த மின் உற்பத்தி 5,300 மெகாவாட் மட்டுமே. மீதமுள்ள மின் தேவையை பூர்த்தி செய்ய தனியாரிடம் வாங்குகிறோம்.

உடன்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தியை 660-ல் இருந்து 800 மெகாவாட்டாக உயர்த்த திட்டம்.

கூடுதல் மின் தேவை ஏற்படும்போது அதை மட்டுமே கொள்முதல் செய்யும் வகையில் தான் டெண்டர்.

எண்ணூரில் நாப்தால் மின் உற்பத்தி செய்தால் ரூ.47 வரை செலவாகும் என்பதால் கேஸ் பவரை கொள்முதல் செய்கிறோம்.

மின் கொள்முதலில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் என்று குற்றம்சாட்டுவது அரைவேக்காட்டுத்தனம்.

ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களும் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.30க்கு மேல் கொடுத்து கொள்முதல் செய்கிறார்கள்.

தினமும் ரூ.7 கோடிக்கு மின் கொள்முதல் செய்யவில்லை என்றால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

டெண்டர் முறையில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT