தமிழக வெற்றிக் கழகத்துக்கு இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது ஆதரவு கடிதங்களை அளித்துள்ளன. இதையடுத்து, தவெகவின் பலம் 117 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
ஆளுநர் ஆட்சி நடைபெறுவதை தவிர்க்கவே தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம்.
தவெக ஆட்சி அமைக்க நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளோம்
அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம்.
விசிகவும் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நாங்கள் தவெகவுக்கு ஆதரவு மட்டுமே அளித்துள்ளோம். கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை.
மக்கள் தவெகவுக்கு பெரும்பான்மை அளித்துள்ளனர். அந்தத் தீர்ப்பை நாங்கள் வழிமொழிந்துள்ளோம்.
மக்கள் பிரச்சனைகளுக்காக திமுக உடன் சேர்ந்து பயணிப்போம் என தெரிவித்தனர்.