தமிழக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும்.

நாடு முழுவதும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒன்றிய பாஜக அரசால் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் சங்கிலித் தொடர் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும்.

புயலில் சிக்கிய படகு போலக் குடும்பங்கள் தள்ளாடும் நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்கி, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.