தமிழக செய்திகள்

அதிரடியாக உயர்ந்த வணிக சிலிண்டர் விலை...! ரூ.3,237-க்கு விற்பனை- வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

மே 1-ந்தேதி தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.

இதற்கிடையே மே 1-ந்தேதி தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் 19 கிலோ வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.993 உயர்ந்துள்ளது. இதனால் டெல்லியில் இப்போது வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.3071.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.990.50 உயர்ந்து ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டர் விலை அதிகரித்தபோதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

மேற்காசிய போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே ஓட்டல்கள், டீக்கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இன்று வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் ஓட்டலில் உணவுப்பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.