டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்ததும் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கக்கூடாது என்று உத்தரவிட்டார். அப்படி வாங்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். மேலும் இது சம்பந்தமாக இ-மெயில் மூலம் வந்த புகார்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் மட்டும் 200 டாஸ்மாக் ஊழியர்கள் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது இப்போது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது.