தமிழ்நாடு சட்டசபையில் இன்று கோவை மாணவன் கொலை தொடர்பாக தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் பேசியது பின் வருமாறு:-
போதைப்பொருள் 15 வயது மாணவர்கள் இடையே புழக்கத்தில் உள்ளது. கடந்த ஆட்சியில் இரந்த போதைப்பொருள் புழக்கம் போன்றவை த.வெ.க. ஆட்சியிலும் தொடர்வது வேதனை தருகிறது. மாணவர்கள் கொலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். கோவை, திருவொற்றியூர் மாணவர்கள் கொலை குறித்து நீதி விசாரணை தேவை.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும்.
கஞ்சா போதை பழக்கமே கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் தாக்குதலுக்கு காரணமாக உள்ளது. சட்டம்- ஒழுங்கு பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல், காவல்துறையை களை எடுத்து கரைபடியாத கரங்களாக கொண்டு வரவேண்டும்.
காவல்துறை பொறுப்பற்ற முறையில் உள்ளது. கொல்லப்பட்ட மாணவன் அமுதன் குடும்பத்திற்கு நீதி வேண்டும். த.வெ.க. அரசு போதை கலாச்சாரத்தை ஒழிப்பதுடன் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் என நான் நம்புகிறேன்.
இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழகத்தில போதைப்பொருளால் அசம்பாவிதம் நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ அமைப்புகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம். மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும் என்றார்.