தமிழக செய்திகள்

கோவை சிறுமி படுகொலை: புதிய அரசு மெத்தனம் கூடாது- கனிமொழி எம்.பி

சிறுமி கடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

கோவை சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திமுக எம்பி கனிமொழி பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில்,”10 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் புதிய அரசு மெத்தனமாக செயல்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

கோவை - சூலூர் அருகே 10 வயது சிறுமி கடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக தொடரும் வன்முறைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய அரசு மெத்தனமாக செயல்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.