தமிழ்நாட்டில் நாளை 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. மேலும் கட்சியினர் யாரேனும் விதிமீறி பிரசார வேலைகளில் ஈடுபடுகிறார்களா, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுகிறா எனவும் தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் கோவை தெற்கில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என அத்தொகுதியின் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மேலும் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுக தரப்பில் பணப்பட்டுவாடா செய்வதாகவும், அதுகுறித்து புகாரளித்தாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தேர்தல் ஆணையமும், காவல் ஆணையரும் அவர்களுக்கே சாதகமாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி வாக்காளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.