தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
விதை சுத்திகரிப்புத்திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.7.1 கோடியில் அமைக்கப்படும்.
17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியத்திற்கு ரூ.9.36 கோடி ஒதுக்கீடு.
8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.27.82 கோடியில் அமைக்கப்படும்.
தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக நடத்தப்படும் வேளாண் கண்காட்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு.
பனைவிதை, பனங்கன்று விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனைபொருள் உற்பத்தி கூடாரம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.
வீடுகளின் மாடிகளில் தோட்டம் அமைக்க மானியம் வழங்கும் வகையில் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் என்ற புதிய திட்டம்.
தென்னை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தென்னை சிறப்புத்திட்டத்திற்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு.
தென்னை டானிக், பூச்சி நோய்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவைக்காக தென்னை சிறப்பு திட்டம் அமைக்கப்படும்.
கரூர் முதலைப்பட்டியில் தென்னை நாற்றுப்பண்ணை ரூ.48 லட்சத்தில் அமைக்கப்படும்.
நன்னெறி சாகுபடி, நஞ்சற்ற உற்பத்தி, உலகளாவிய ஏற்றுமதிக்காக வேளாண் பட்ஜெட்டில் ரூ.8.43 கோடி ஒதுக்கீடு.
தென்னை பதப்படுத்தும் கழகம் ரூ.5.30 கோடியில் அமைக்கப்படும்.
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தென்னை சாகுபடி ஊக்குவிக்க ரூ.16 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.