மீனவப் பெருமக்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு உள்ளது. அவர்களின் நலன்களை பேணிப் பாதுகாப்பது அனைவரின் கடமையாகும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.
மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும்.
மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்! என்று கூறியுள்ளார்.