தமிழக செய்திகள்

காந்தியடிகள் காட்டிய அறவழியில் நமது வெற்றிப் பயணத்தை தொடர்வோம்- முதலமைச்சர் விஜய்

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் அவரது தேசப்பற்றையும், தியாக வாழ்வையும் போற்றி வணங்குகிறேன்.

மகாத்மா காந்தியின் 157வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் மரியாதை செலுத்தி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி ராஜ்காட்டில், மலர்களாக அலங்கரிக்கப்பட்டு இருந்த காந்தி நினைவிடத்தில், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்து, இந்தியத் திருநாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத்தந்த மாபெரும் தலைவர், நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் அவரது தேசப்பற்றையும், தியாக வாழ்வையும் போற்றி வணங்குகிறேன்.

எளிமை, நேர்மை, மனிதநேயம், சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைத் தனது வாழ்வின் நெறிகளாகக் கொண்டு, உலகம் முழுமைக்கும் அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்பிய மாமனிதராகத் திகழ்ந்தவர்.

மகாத்மா காந்தியடிகளின் கனவுகளை நனவாக்கி, அமைதியும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தழைத்திடும் சமூகத்தை உருவாக்கி, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து, அவர் காட்டிய அறவழியில் நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT