திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க நாளை மறுநாள் முதலமைச்சர் விஜய் திருச்சி செல்கிறார்.
நடந்து முடிந்து சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு விஜய் வெற்றி பெற்று இருந்தார். பெரம்பூர் எம்எல்ஏவாக தொடர முதலமைச்சர் விஜய் விருப்பப்பட்ட நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார். இந்நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதலமைச்சர் விஜய் நாளை மறுநாள் திருச்சி செல்கிறார்.
திருச்சி புனித வளனார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் விஜய் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.
முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு தமிழ்நாட்டில் சென்னைக்கு பிறகு முதல் முறையாக திருச்சிக்கு விஜய் செல்கிறார்.