தமிழ்நாடு முதலமைச்சராக கடந்த 10-ந்தேதி விஜய் பதவியேற்றார். பதவி ஏற்ற நாளில் இருந்து தினமும் தலைமைச் செயலகம் வந்து அவர் பணியாற்றி வருகிறார்.
புதிய அரசு அமைந்த உடன் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் டெல்லி செல்லும் அவர் பிரதமர் மோடி, சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார்.
தமிழக அரசின் ரூ.65 லட்சம் நிதி உதவியுடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 7 அடி உயர வள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் நேரு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.