முதலமைச்சர் விஜய் 
தமிழக செய்திகள்

அடுத்தடுத்து சர்ச்சைகள்: த.வெ.க. எம்.எல்.ஏ.-க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை

இரு விவகாரங்​களும் தமிழக அரசியலில் அதிர்​வலைகளை ஏற்​படுத்தி உள்ளன.

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைத்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்​டம்-ஒழுங்கு பிரச்சினை பூதாகாரமாகியுள்ளது. மேலும், கொலை, கொள்ளை பாலியல் குற்​றங்​கள் அதி​கரித்​து ​விட்​ட​தாக திமுக, அதிமுக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து விமர்​சனங்​களை முன்​வைத்து வரு​கின்​றன. இது மட்டுமின்றி ஆளும் கட்சியினரின் செயல்​பாடுகளும் சர்ச்​சைக்​கு உள்​ளாகி வரு​கின்​றன.

அந்த வகையில், துறையூர் எம்எல்ஏ-வும், துணை சபாநாயகருமான ரவி சங்கர், சில கோரிக்கைகளுடன் வந்த நபரை தாக்கியதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் கள்​ளக்​குறிச்சி தொகுதி தவெக எம்​எல்ஏ அருள் விக்​னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் இதன் காரண​மாக ஆட்சி​யர் வீட்​டுக்​கு போலீஸ் பாது​காப்​பு போடப்பட்டுள்ள​தாக எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சாட்​டியுள்ளன. இந்த இரு விவகாரங்​களும் தமிழக அரசியலில் அதிர்​வலைகளை ஏற்​படுத்தி உள்ளன.

எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம்:

இந்த சர்ச்சைக்களுக்கு மத்தியில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலு​வல​கத்​தில் அக்​கட்​சி​யின் ஒழுங்கு

நட​வடிக்​கைக் குழு கூட்​டம் இன்று (நவ. 11) நடை​பெறுகிறது. இந்த ​கூட்​டத்​திற்கு முதலமைச்சர் விஜய் தலைமை வகிக்​கிறார். கட்சியின் பொதுச் செய​லா​ள​ர் என். ஆனந்த் உள்​ளிட்ட முக்​கிய நிர்​வாகி​கள் பங்​கேற்று சம்​பந்​தப்​பட்ட எம்​எல்ஏக்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

இக்​கூட்​டத்​தில் தவெக எம்எல்ஏ-க்​கள் அனைவரும் தவறாமல் பங்​கேற்க வேண்​டும் என்று கட்சி தலைமை உத்​தர​விட்​டுள்​ளது. இதில் சம்​பந்​தப்​பட்ட எம்​எல்​ஏக்​கள் மீது கட்சி ரீதி​யி​லான ஒழுங்கு நடவடிக்கை எடுக்​க வாய்ப்​புள்​ள​தாகவும் கூறப்​படு​கிறது.

மேலும் இந்​த கூட்​டத்​தில், எம்​எல்​ஏக்​கள் தொடர்ந்து சர்ச்​சைகளில் சிக்​கு​வதை தடுப்​பது, பொது​மக்​களிடம் எப்​படி நடந்து கொள்​வது, கட்​சி​யின் நற்​பெயருக்​கு பாதிப்பு ஏற்​படா​மல் செயல்​படுவது எப்படி என்​பது உள்​ளிட்ட விவகாரங்​கள் குறித்து விஜய்​ ஆலோசனை நடத்த உள்​ளதாக தெரிகிறது.

சட்டம் ஒழுங்கு விவகாரம்:

முன்னதாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில், அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் நேற்று (நவ. 10) ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலர் சாய்குமார், உள்துறை செயலர் கார்த்திக், டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அன்பு, உளவுத்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒரே நாளில், 14 கொலைகள் நடந்தது குறித்து, அதிகாரிகளிடம் முதலமைச்சர் விளக்கம் கேட்டார். இதற்கு அதிகாரிகள், எட்டு கொலைகள் மட்டுமே தீபாவளி நாளில் நடந்ததாக கூறினர். கொலைகளுக்கான காரணங்களையும் முதல்வரிடம் எடுத்துரைத்தனர்.

SCROLL FOR NEXT