தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாள் அமர்வு தொடங்கியது
மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசுவாமி, வீராசாமி, சுவாமிநாதன், ஆறுமுகம், கண்ணன், நாஞ்சில் முருகேசனுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு, ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதையடுத்து மேகதாது அணை தொடர்பான அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.
மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது.
* கர்நாடக அரசின் முயற்சியை முறியடித்து தமிழ்நாட்டு உழவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.
* காவிரிப்படுகை மாநிலங்களின் இசைவின்றி கர்நாடகம் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.
* கர்நாடக அரசின் தன்னிச்சையான முயற்சிக்கு சட்டமன்ற பேரவை கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
* கட்சி வேறுபாட்டை ஒதுக்கி யாரும் யாரையும் குறை கூறாமல் நாம் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும்.
அரசியலே மக்களுக்கானது என்பது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்.
* கொள்கை, நிலைப்பாட்டில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் மக்களுக்கு பிரச்சனை எனில் அனைத்து கட்சியும் மக்கள் பக்கம் நிற்கும்.
* மேகதாது அணை கட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
* காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காது படுகை மாநில இசைவை, மாநில அரசை பெறாமல் தன்னிச்சையாக முயற்சித்து வருகிறது.
* மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.