த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தனது கணவர் விஜய்க்கு, நடிகை ஒருவருடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருந்த சங்கீதா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்றும், அவரது சமூக அந்தஸ்துக்கு ஏற்றவாறு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம், வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதிக்கு தள்ளி வைத்தது. அன்றைய தினம் விஜய்-சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வக்கீல்கள் மட்டும் ஆஜரானாார்கள். விஜய், சங்கீதா இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால் நேரில் ஆஜராவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் இதர சிக்கல்களை கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஜூன் 15-ந்தேதி (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.