தமிழக செய்திகள்

கோவையில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

அவினாசி சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது.

கோவையில் முதலமைச்சர் விஜய் அவினாசி ரோடு வழியாக விழா நடைபெறும் காந்திபுரத்துக்கு 10 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ சென்றபடி மக்களை சந்தித்தார்.

முதலமைச்சர் விஜய்

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையம் உள்ளது.

பெரியார் நூலகத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், கலெக்டர், அதிகாரிகள் மற்றும் த.வெ.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

ரோடு ஷோ

பின்னர் அவர், அவினாசி ரோடு வழியாக விழா நடைபெறும் காந்திபுரத்துக்கு 10 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ சென்றபடி மக்களை சந்தித்தார். அவினாசி சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சராக விஜய், பதவியேற்ற பின் கோவையில் நடைபெறும் அரசு விழாவில் முதன்முறையாக பங்கேற்பதால் அவரை வரவேற்கவும், பார்க்கவும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடினர்.

பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

முதலமைச்சர் விஜய்க்கு காந்திபுரம் வரை சாலையின் இருபுறமும் திரண்டு பொதுமக்கள், த.வெ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சர் வருகையால் கோவையில் 4,030 போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT