தமிழக செய்திகள்

இமானுவேல் சேகரனாரின் தியாக வரலாறு என்றும் போற்றத்தக்கது- முதலமைச்சர் விஜய்

தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள் காட்டிய வழியில், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைப் படைத்து, சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க இந்நாளில் உறுதியேற்போம்!

சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் முதலமைச்சர் விஜய் வீர வணக்கம் செலுத்தி, அவரது தியாக வரலாறு என்றும் போற்றத்தக்கது என புகழாரம் சூட்டினார்.

தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

வீர வணக்கம்

சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில், அன்னாரைப் போற்றி எனது வீர வணக்கங்களைச் செலுத்துகிறேன்.

சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் குரல் கொடுத்ததோடு, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் தியாக வரலாறு என்றும் போற்றத்தக்கது.

தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள் காட்டிய வழியில், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைப் படைத்து, சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்க இந்நாளில் உறுதியேற்போம்! என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT