தமிழக செய்திகள்

அயோத்திதாசர் பண்டிதரின் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை

சமூக சீர்திருத்தவாதியும், தமிழ் புலவருமான அயோத்திதாசர் பண்டிதரின் 181-வது பிறந்தநாள் இன்று.

சமூக சீர்திருத்தவாதியும், தமிழ் புலவருமான அயோத்திதாசர் பண்டிதரின் 181-வது பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டியில் உள்ள அயோத்திதாசர் பண்டிதரின் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் அயோத்திதாசர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.