கைதான கிரானைட் தொழிலதிபர் வீரமணி- முதலமைச்சர் விஜய் 
தமிழக செய்திகள்

‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை: முதலமைச்சர் விஜய் உத்தரவு

சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீ​சார் கடந்த ஆண்டு அக்​டோபரில் போக்சோ உள்​ளிட்ட பல்வேறு பிரிவு​களின் கீழ் வழக்​கு பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கினர்.

கிரானைட் தொழிலதிபர் ‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை

சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரை தொடர்புகொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்தார். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அலுவலகத்துக்கு வந்து 'பென்டிரைவ் ஒன்றை கொடுத்ததாகவும், அதில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த வீடியோவை ஆய்வு செய்தபோது, வயதான நபர் ஒருவர் 13 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சி இருந்தது. இதன் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

வீடியோவில் இடம்பெற்றிருந்த முதியவர் கிரானைட் தொழில் அதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி (84) என்பது தெரிய வந்தது. மேலும், வீரமணி தேனாம்பேட்டை பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாக பொறுப்புக்களை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கனிடம் ஒப்படைத்திருந்தார்.

அந்த வீட்டுக்கு சிறுமிகள் அழைத்து வரப்பட்டு பாலியல் குற்றங்கள் நடைபெற்றதாகவும், மேலும் சில தொழில் அதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு சிறுமிகள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

கைது

வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் நடத்திய சோதனையில் வழக்குடன் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து வீரமணி, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்​னையில் 84 வயது முதி​ய​வர் ஒரு​வர் சிறுமியை பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​தி​யது தொடர்​பான வீடியோ காவல் ​துறையினருக்கு கிடைத்​தது. இதுகுறித்​து சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீ​சார் கடந்த ஆண்டு அக்​டோபரில் போக்சோ உள்​ளிட்ட பல்வேறு பிரிவு​களின் கீழ் வழக்​கு பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கினர்.

இதனையடுத்து, பிரபல ஜெம் கிரானைட்ஸ் நிறுவன அதிபர் வீரமணி மற்றும் சாந்தி, அவரது கணவர் மகேந்​திர சிம்​கன் ஆகியோரை போலீசார் கடந்த மாதம் 28-ந்தேதி கைது செய்தனர். இந்த விவகாரத்தில் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல தொழிலதிபர்களுக்கு இதில்தொடர்பு உள்ளது என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பாதிக்​கப்​பட்ட சிறுமி ஒரு​வர் போலீசாரிடம் இதுபற்றி தெரி​வித்​துள்​ளார். இதைத் ​தொடர்ந்​து, சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த வீரமணியை போலீ​சார் 3 நாள் காவலில்​ எடுத்​து தற்​போது விசா​ரித்​து வரு​கின்றனர்.

முதலமைச்சர் விஜய் உத்தரவு

இந்நிலையில், ‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வீரமணி மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது என்றும் வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முறை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை அழைத்து முதலமைச்சர் விஜய் நேரடியாக ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் உத்தரவையடுத்து கிரானைட் வீரமணி மீதான பாலியல் வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விபசார தடுப்பு பிரிவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கில் முக்கிய தொழில் அதிபர்கள் கைதாகலாம் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT