முதலமைச்சர் விஜய் 
தமிழக செய்திகள்

நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்: டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்- முதலமைச்சர் உத்தரவு

மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழர்களின் நிலை பற்றி கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எ.ஸ் தலைமையிலான குழுவை நேபாளம் காத்மாண்டுவுக்கு அனுப்ப முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் சாய்குமார் அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு மற்றும் அயலகத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழர்களின் நிலை பற்றி கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். அவர்களை பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து, நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக 4 அமைச்சர்களை டெல்லி செல்ல முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் ஆதவ், ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர்.

அமைச்சர்கள் டெல்லி சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்கவும், 4 அமைச்சர்களும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எ.ஸ் தலைமையிலான குழுவை நேபாளம் காத்மாண்டுவுக்கு அனுப்ப முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.