சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முதலமைச்சர் விஜய்க்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எந்தவிதமான அழுத்தமும் இருக்கவில்லை.
சோனியா காந்தியிடமிருந்து ஒரு அழைப்பு செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. ராகுல் காந்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு சென்றது. விஜய் அழைப்பை ஏற்று வந்தார்.
அதுதான் நடந்த உண்மை.
இதை மாற்றி, பொய்யான கதைகளை உருவாக்கி பரப்ப வேண்டாம், JV.
Fake News-ஐ தொடர்ந்து பரப்பினால், ஒரு நாள் அந்தப் பொய்யே உங்களை ‘நக்கீரன்’ ஆக்கிவிடும்!
உண்மையை எழுதுங்கள்.
உண்மையை மட்டுமே எழுதுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.