தமிழக செய்திகள்

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் பல்வேறு அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

முதலமைச்சர் விஜய், அரசியல் தலைவர்களை சந்தித்த வாழ்த்து பெறுவது அரசியல் நாகரிகம் என்று தலைவர்கள் பாராட்டினர்.

இதற்கிடையே, இன்றும் அரசியல் தலைவர்களைச் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெறுகிறார். அந்த வகையில், முதலில் சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றார். அவரை அலுவலக வாயில் முன்பு வந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். அதனை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொகிதீனிடம் வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்றார். அவரை காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். அங்கு முன்னாள் முதல்வர் காமராஜர் படத்திற்கு முதல்வர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அங்கிருந்த பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.