தமிழக செய்திகள்

பெரியார் திடலில் முதலமைச்சர் விஜய் - கி.வீரமணியுடன் சந்திப்பு

பெரியார் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பூங்கொடுத்து கொடுத்தார். பதிலுக்கு கி.வீரமணியும் முதலமைச்சர் விஜய்க்கும் பொன்னாடை போர்த்தி புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

இதனை தொடர்ந்து சிறிது நேரம், கி.வீரமணியுடன் முதலமைச்சர் விஜய் கலந்துரையாடினார்.

பெரியார் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். இதன்பின், பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.