சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று, 751 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மாற்றுத்திறனாளி பிரிவில் தேர்வான மருத்துவருக்கு மேடையில் இருந்து இறங்கிச் சென்று பணி நியமன ஆணையை அவர் வழங்கினார்.
இதையடுத்து, சுகாதாரம், குடும்பநல அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாக 'நலம் TN' இணையதளத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இணையதளத்தில் மக்கள் எளிதாகப் பெற உதவும் வகையில் 'நலம் TN' இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் ரூ.139.47 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டடங்கள் மற்றும் நவீன உபகரணங்களை திறந்து வைத்தார். சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்ட 1,393 பேருக்கும் பணி ஆணைகளை வழங்கினார்.