தமிழக செய்திகள்

தீவிரம் அடையும் பருவமழை- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆய்வு

தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை காரணமாக முதலமைச்சர் விஜய் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழை பாதிப்புகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக மாலையில் இருந்து விடிய, விடிய கன மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஆய்வு

மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றம் பணியும் நடைபெற்றது. மேலும் அவ்வப்போது, அமைச்சர்கள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வருகிற 28-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மழை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பும் முதலமைச்சர் விஜய், மாநில பேரிடர் கட்டுப்பாடு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT