மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார் முதலமைச்சர் விஜய் 
தமிழக செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னையில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள்- முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு

முதலமைச்சர் விஜய் மாநிலம் முழுவதும் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்து, வெள்ள பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பரவலாக பெய்தது. இருப்பினும் இந்த ஆண்டு ‘எல்நினோ’ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்யவில்லை. இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று முழுமையாக விலகியது.

இதை தொடர்ந்து தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘எல்நினோ’ பாதிப்பு காரணமாக மழையின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழக அரசு தேவையான முன்னேற்பாடுகளை செய்து உள்ளது.

ஆய்வுக்குழு

‘எல்நினோ’வால் தமிழகத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக நிபுணர் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைத்து உள்ளது. இந்த குழுவினர் அதிக மழை பாதிப்பு உள்ளிட்ட அத்தனை விஷயங்கள் குறித்தும் ஆய்வு செய்து உள்ளனர்.

முதலமைச்சர் விஜய் மாநிலம் முழுவதும் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் மழை நீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை ஏற்கனவே மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னையிலும், அனைத்து பகுதிகளிலும் மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு அதில் தேங்கி உள்ள ஆகாயத் தாமரை அகற்றப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.

நேரில் ஆய்வு

இந்த நிலையில் வட சென்னை பகுதிக்குட்பட்ட இடங்களில் முதலமைச்சர் விஜய் மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அவரது பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2 இடங்களுக்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு பணிகளை முடுக்கி விட்டார். வியாசார்பாடி முல்லை நகர், கேப்டன் கால்வாய் மற்றும் பேஷன் பிரிட்ஜ் ஆகிய இடங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகள் ராட்சத எந்திரங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. அந்த பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய் இதற்கு முன்னர் அந்த பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி கேட்டறிந்தார்.

மேலும் வெள்ள பாதிப்பு தொடர்பான பழைய புகைப்படங்களை பார்வையிட்டு அதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நீளமான கால்வாய்

வியாசர்பாடி முல்லை நகரில் 3,040 மீ. நீளம் கொண்ட ‘கேப்டன் காட்டன் கால்வாய்’ பக்கிங்காம் கால்வாயுடன் இணையும் கால்வாயாகும்.

இந்த கால்வாயில் ஆகாயத் தாமரைகள் அதிக அளவில் பரவி கிடந்தன. அதனை அகற்றும் பணிகளை தான் இன்று முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மழைநீர் வடிகால் பணிக்காக கட்டப்பட்டு வரும் 3 மோட்டார் அறைகளையும் அவர் பார்வையிட்டார். கடந்த காலங்களில் இந்த கால்வாய்கள்தான் அதிக அளவில் தண்ணீர் தேங்கி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன?

இந்த பகுதிகளில் வெள்ள நீர் எத்தனை மணி நேரம் தேங்கி நின்றது அதற்கான காரணம் என்ன? என்பது பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

இந்த ஆய்வின் போது, தலைமை செயலாளர் சாய் குமார், நகராட்சி நிர்வாகம், நீர்வழங்கல் துறை, கூடுதல் தலைமை செயலாளர் ககன் தீப்சிங் பேடி, சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் மற்றும் அதிகாரிகள் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்.

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி இருப்பதை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் கால்வாய் பகுதிகளை முழுமையாக தூர்வாரி வேகப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் தீவிரமாக தொடர்ந்து மேற்கொள்ள உள்ளனர். மழை வெள்ள பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முழுவீச்சில் தயாராகி உள்ளது.

வளிமண்டல சுழற்சி

இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாநிலங்களிலும் பல்வேறு தகவல்களையும் வெளியிட்டு உள்ளது. இதன்படி மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகள் வரை, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுபாதை நிலவுகிறது.

மிக கனமழை

இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

29 மாவட்டங்கள்

நாளை (வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்

உள் தமிழகத்தில் அதிக பட்ச வெப்ப நிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT