கரூர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் என் மனதின் ஆறாத காயம் கரூர் சம்பவம் என்று பேச்சைய தொடங்கிய முதலமைச்சர் விஜய் கடந்த தி.மு.க. ஆட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-
* கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்தது தெரியுமா?
* கரூர் சம்பவத்தின் போது காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுத்ததா?
* நமக்காக வந்துள்ள மக்களை காக்க வைத்து ஆதாயம் தேடுபவன் நான் அல்ல.
* எனக்காக எல்லாவற்றையும் கொடுத்த மக்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தவன் நான்.
* என்னை ஏளனமாக பேசுகிறீர்கள், ஓடி ஒளிந்துவிட்டார் என என்னைப் பார்த்து பேசினர். வாய் என்று ஒன்று இருப்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் பேசுவீங்களா?
* ஒவ்வொரு துறையிலும் தீயசக்தியும், தீர்ந்துபோன சக்தியும் சேர்ந்து பார்ட்டி ஃபண்ட் வாங்கியுள்ளனர். பார்ட்டி பண்டு என்றுதான் சட்டமன்றத்தில் சொன்னேன். எந்த கட்சி எனச்சொல்லவில்லை.
* சென்னையில் பாலம் கட்ட வழக்கமான செலவைவிட இருமடங்கு செலவில் ஒப்பந்தம் விட்டுள்ளனர். அதையெல்லாம் தோண்டி எடுத்து ரத்து செய்தோம். இன்னும் எத்தனை வருமென்று தெரியவில்லை.
* விஜய் ஒவ்வொரு கதையாக எடுத்து வெளியே விடுவார் போல என கதறல் கதறல் என திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.
* அரசு அலுவலகங்களில் ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஒரு பைசா ஊழல் இல்லை. அரசு அலுவலகங்களில் வேலைகள் விரைவாக நடப்பதாக மக்கள் பெருமையுடன் பேசுகின்றனர்.
* எல்&டி நிறுவனத்துடன் ரூ.18ஆயிரம் கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
* தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்க உள்ளது. தீயசக்திபோல் ரீல் தாய்மாமன் எல்லாம் இல்லை. நான் ரியல் தாய்மாமன்.
* தீயசக்தியின் நிர்வாகம் பற்றிய வெள்ளை அறிக்கையை அண்மையில் வெளியிட்டோம். நிதித்துறை குறித்த வெள்ளை அறிக்கையை பற்றி சுருக்கமாக ஒரு உதாரணம் சொல்கிறேன்.
* ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றியுள்ளனர். தண்ணீர் எங்கே போனது என தெரியவில்லை.
* நான் பேசவில்லை என்றால் வாயத் திறங்க CM என பேட்ஜ் குத்திக்கொண்டு வருகின்றனர்.
* நான் பேசினால் விஜய்க்கு அரசியல் பேசத் தெரியவில்லை என சொல்வார்கள்.
* நான் 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போடப்பட்டுள்ளது.
* மேகதாது அணை வழக்கில் தமிழ்நாட்டு மனுவை உச்சநீதிமன்றம் எப்போது ரத்து செய்தது? அப்போது ஆட்சியில் இருந்தது யார்? ஏன் சரியாக வாதாடவில்லை?
* சட்டமன்றத்தில் அரசினர் தீர்மானம் கொண்டு வந்தோம். எப்படி கொண்டு போக வேண்டுமோ அதை செய்வோம்.
* எங்களுக்குள் ஓட்டும் இல்லை, உறவும் இல்லை என நிரூபிக்க முடியுமா? இடைத்தேர்தலில் நிரூபியுங்கள், பிறகு பேசுங்கள்.
* பேசுவதை விட செயலில் காட்ட வேண்டும். ‘டாக் லெஸ், ஒர்க் மோர்’ என்பதே நமது அரசியல் என்றார்.