முதலமைச்சர் விஜய் 
தமிழக செய்திகள்

பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணிப்போம்- முதலமைச்சர் விஜய்

வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்! என்று கூறியுள்ளார்.

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தந்தை பெரியாரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில்,

நினைவுகூர்ந்து வணங்குகிறேன்

சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!

தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்!

வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்! என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT