தமிழக செய்திகள்

லண்டன் முதலீடுகள்: அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

25-ம் தேதி 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடக்கம்

லண்டன் முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார்.

லண்டன் பயணம்

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய் 12-ந்தேதி, உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டுக்கு நேரில் சென்று, அங்குள்ள 'ரேஸ் கண்ட்ரோல்' மற்றும் 'ரேஸ் சர்க்யூட் பகுதிகளை பார்வையிட்டார்.

14-ந்தேதி முதலமைச்சர் விஜய் முன்னிலையில் லண்டனில் வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், புதிய தொழில் முதலீட்டுக்கான கடிதம் என மொத்தம் 15,300 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் ஆலோசனை

இந்த நிலையில், லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

அதைபோல வரும் 22-ம் தேதி காலை உணவு திட்ட விரிவாக்கம் மற்றும் 25-ம் தேதி 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடக்கம் தொடர்பான நடைமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம் வழங்கப்பட உள்ளது. தங்கமோதிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கும் தேதி, இடம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

ஒப்பந்தம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், சென்னை DLF DOWNTOWN தரமணி வளாகத்தில் வால்கிரீன்ஸ் இந்தியா நிறுவனம் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

SCROLL FOR NEXT