ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் கோரிக்கையை ஏற்று புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி டெல்லிக்கு செல்ல உள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவர் நாடாளுமன்றத்தில் தான் பேசிய உரையை புத்தகமாக தயாரித்துள்ளார். இந்த புத்தக வெளியிட்டு விழா டெல்லியில் வரும் ஆகஸ்ட் 4-ந்தேதி நடக்க இருக்கிறது.
இந்த புத்தகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வெளியிட இருக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, வைகோ கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று ஆகஸ்ட் 4-ந்தேதி முதலமைச்சர் விஜய் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிகழ்வில், பல முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்த புத்தக வெளியீடு மூலம் டெல்லி அரசியலில் முதலமைச்சர் விஜய் தடம் பதிக்க இருக்கிறார்.