தமிழகத்தில் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, மதுராந்தக தொகுதியின் தவெக வேட்பாளர் மரகத குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் உரையாற்றியதாவது:-
ஊழலை எடுத்துச் சொன்னால், அப்போ விஜய் பிறக்கவில்லை என்று திமுகவினர் சொல்கிறார்கள். நான் எப்போ பிறந்தா உங்களுக்கு என்ன? வரலாற்றை எடுத்துப் பார்த்தால் உங்கள் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் தெரியப்போகுது.
சட்டமன்றத்தில் திமுகவினர் கத்துகிறார்கள். எதற்காகக் கத்துகிறார்கள் என்று நமக்குத் தெரியமாட்டேங்குது. எனக்கு சட்டமன்றம் புதிது; பேசலாமா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் இருந்தேன். ஆனால், அவர்களின் நோக்கம் புரிந்துவிட்டது. நான் பேசக்கூடாதாம். அதனால், நான் கத்திப் பேசினேன்.
இன்ஸ்பெக்ஷனுக்கு சென்றால்... நாங்கள் கட்டிய பாலத்தின் மீது நின்று ஷூட்டிங் எடுக்கிறார் விஜய் என விமர்சிக்கிறார் ஸ்டாலின்.
நீங்கள் என்ன உங்கள் சொந்த பணத்திலிருந்தா பாலம் கட்டினீர்கள்? அல்லது கணக்கில் காட்டாத பணத்தை வைத்து கட்டினீர்களா?
முதல்வர் என்பவர் மக்களுக்கு முதலாளி அல்ல, சர்வன்ட் தான், ஆனால் தமிழ்நாட்டிற்கே முதலாளி போல் ஸ்டாலின் பேசுகிறார்.
இலவச சிலிண்டர் விவகாரத்தில் மக்களை தூண்டிவிட்டு கேள்வி எழுப்ப திமுக திட்டமிட்டது, ஆனால் மக்கள் அவர்களது முகத்தில் கரியை பூசினர்.
உங்கள் கணக்கு எல்லாம் ஒண்ணுதுக்கும் ஆகாத மன கணக்கு; எனக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உள்ளது அன்பு கணக்கு.
எப்போது பார்த்தாலும் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டுள்ளனர். திமுக வேற பாஜக வேற இல்லை. டெல்லயில் இருக்க திமுகவிற்கு பெயர்தான் பாஜக. தமிழ்நாட்டில் இருக்க பாஜகவிற்கு பெயர்தான் திமுக.
என் சொந்த தாயை திமுகவினர் தவறாக பேசும் போது கூட பொறுத்துக்கொண்டேன். எனக்கு தாய் அன்பு காட்டும் பெண்களை திமுகவினரும், தலைமையும் அவதூறாகத்தான் பேசுகிறார்கள்.
பெண்களை திமுகவினர் அவதூறாக பேசிக் கொண்டிருப்பதை அவர்கள் குடும்பமே ரசிக்கிறது.
ஆமாம். நான் கடன் வாங்குகிறேன்.. கொள்ளையடிப்பதற்கு அல்ல... மக்களுக்கு நல்லது செய்வதற்காக.. கொடுத்த வாக்குறுதிகளில் கொஞ்சமாவது படிப்படியாக செய்வதற்காக கடன் வாங்குகிறேன்
6 சிலிண்டர் கொடுப்பேன் என்று சொன்னேன். இந்த நிலைமையில் 3 சிலிண்டர்தான் கொடுக்க முடிந்தது; அதை உடனே நடைமுறைப்படுத்துங்கள் என்று சொல்கிறேன்.
MGR, ஜெயலலிதா வார்த்தைக்கு வார்த்தை தீயசக்தி என சொன்ன திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிப்பதா?
MGR கொள்கைக்கு மாறாக செயல்படும் வலியை தாங்க முடியாமல்தான் அதிமுகவில் இருந்து மரகதம் குமரவேல் விலகினார்.
MGR, ஜெயலலிதாவை போல் விஜய்க்கும் தீய சக்தி திமுகதான் எதிரி. MGR தொண்டர்களுக்காக நான் இருப்பேன்.
தமிழ்நாட்டு சிறுமிகளை இத்தனை வருடங்கள் ஒருவன் சீரழித்துக் கொண்டிருக்கிறான். இந்த வழக்கை முந்தைய திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது.
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் மு.க.ஸ்டாலின் சார் வாயை திறக்காதது ஏன் ?
திமுகதான் வாயை திறக்கவில்லை என்றால் மற்றும் பலரும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.