தேனி மாவட்டத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் பணியில் இருந்தபோது தாக்குதலில் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து, தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மாற்றுப்பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், நேற்று இரவு தனது பணியில் இருந்தபோது, சமதர்மபுரம் பகுதியில் சில நபர்கள் சாலையின் குறுக்கே பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பட்டாசுகளை வெடித்து அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியதால் அவர்களை கண்டித்த போது அவர்கள் தாக்கியதில், பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
செந்தில்குமாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு நாற்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.