தமிழக செய்திகள்

சட்டசபை தேர்தலில் நமக்கு வெற்றி என்பதில் துளி அளவும் மாற்றமில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக தொண்டர்களின் உழைப்பின் பலன் மே 4-ந்தேதி தெரியும். இன்னும் 2 நாட்களில் உங்களுக்கு நல்ல செய்தி வரும்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் அமைந்துள்ள தொழிலாளர் நினைவு சின்னத்திற்கு சிவப்பு நிறச் சட்டை அணிந்து வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து மே தின விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* இந்தியாவிலேயே சென்னையில் தான் மே முதல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

* உலகினை உழைப்பால் செலுத்தும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்.

* எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையில் ஆட்சி செய்கிறோம். அது தொடரும்.

* திமுக தொண்டர்களின் உழைப்பின் பலன் மே 4-ந்தேதி தெரியும். இன்னும் 2 நாட்களில் உங்களுக்கு நல்ல செய்தி வரும்.

* சட்டசபை தேர்தலில் நமக்கு வெற்றி என்பதில் துளி அளவும் மாற்றமில்லை

* திமுக தொண்டர்களின் உழைப்பின் மீதான நம்பிக்கையில் பேசுகிறேன்.

* திமுக ஆட்சி மீண்டும் தொடரும்... தொடரும்... தொடரும்...

இவ்வாறு அவர் கூறினார்.