முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. திமுக கூட்டணிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் பயனாளிகள் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதியாக மட்டுமல்லாமல் களத்திலேயே கண்கூடாக தெரிகிறது.
2026 தேர்தல் தீர்ப்பு என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று, மக்களின் ஆதரவு பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.