திருச்சி உழவர் சந்தை பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என பிரதமர் ஒரு முறையாவது கூறினாரா?
* எம்எல்ஏக்களை ஏலம் எடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்றவர் இபிஎஸ்.
* தமிழகத்திற்கு நியாயமான நிதியை கூட மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.
* தமிழகத்திற்கு பாஜக அரசு செய்த திட்டங்களை பிரதமரால் பட்டியலிட முடியுமா?
* தமிழகத்திற்கு அநீதி இழைத்துவிட்டு தேர்தல் வந்ததும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
* என்டிஏ கூட்டணியினர் தமிழகத்தை பற்றி அவதூறாக பேசுவது வளர்ச்சியை கெடுக்க தான்.
இவ்வாறு அவர் கூறினார்.