சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் “சென்னை சூப்பர்-6” எனும் திராவிட மாடல் 2.O வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார்.
அதில், அடுத்த 5 ஆண்டுகளில் சென்னைக்கான வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன? என அறிவிக்கப்பட்டுள்ளது
* சென்னையில் 1000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.
* போக்குவரத்து நெரிசலைக் குறைந்து பயண நேரத்தை 25% வரை சேமிக்க AI தொழில்நுட்பத்தில் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும்.
* விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாட்டு திட்டத்தின் (ABC) கீழ், கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கப்படும்.
* NGO-க்களுடன் இணைந்து விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.