தமிழக செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு மாத காலம் ஓய்வின்றி தேர்தல் களப்பணியில் மும்முரமாக ஈடுபட்டார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் திரட்டினார்.

அவர், ஒரு மாத காலம் ஓய்வின்றி தேர்தல் களப்பணியில் மும்முரமாக ஈடுபட்டார்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்க திட்டமிட்டார்.

அதன்படி அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை புறப்பட்டு சென்று, அங்கிருந்து சாலைமார்க்கமாக கொடைக்கானல் செல்கிறார். அங்கு அவர் ஒரு வார காலம் குடும்பத்தினருடன் தங்கி இருந்து ஓய்வு எடுக்க உள்ளார்.