தமிழக செய்திகள்

TN Assembly Election | திருவண்ணாமலையில் நடைபயிற்சியின்போது மக்களிடம் வாக்கு சேகரித்த முதலமைச்சர்

திருவண்ணாமலையில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

தமிழக தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. வரும் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

தேரடி வீதியில் நடைபயிற்சியின்போது பொதுமக்களுடன் கலந்துரையாடி முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.

மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற முதலமைச்சருக்கு வியாபாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காய்கறி, புத்தகத்தை பரிசாக அளித்தனர். அங்கு கூடிய மக்கள் முதலமைச்சருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.