சென்னை:
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 1 கோடியே 31 லட்சம் குடும்ப தலைவிகள் பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த 1000 ரூபாய் வர இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு பிறகு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்தது. எந்தெந்த கட்சி எவ்வளவு பணம் உயர்த்தி தருவார்கள் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும் இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அத்துடன் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் என அறிவித்து இருந்தார்
இதற்கு அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம் செய்திருந்தார். தி.மு.க.வின் திட்டங்களையே காப்பி அடித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாக தந்துள்ளார் என்று கூறி இருந்தார்.
அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பண மாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கி றது.
வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
திராவிட மாடல் 2.0-ல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! வெல்வோம் ஒன்றாக.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் தி.மு.க.வும் அடுத்து ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து விட்டது. தேர்தல் வாக்குறுதிகளில் இன்னும் பல அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!பிப்ரவரி, மார்ச்,… pic.twitter.com/n7VrMqcrb7