தமிழக செய்திகள்

டெல்லியில் சிஜேபி நிர்வாகிகள் கைது - மு.க.ஸ்டாலின் கண்டனம்

எவ்வளவு இளைஞர்களை சிறையில் அடைக்கிறார்களோ அவ்வளவு மக்கள் அவர்களுக்கு ஆதரவாக போராடுவார்கள்.

சிஜேபி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்காவுக்கு தேவையான சட்டரீதியான ஆதரவை வழங்க திமுக தயாராக உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சிஜேபி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

* எத்தனை இளைஞர்களின் குரல்களை பாஜகவால் ஒடுக்க முடியும்

* இந்த அரசாங்கத்தால் எத்தனை போராட்டக்காரர்களை கைது செய்ய முடியும்.

* எவ்வளவு இளைஞர்களை சிறையில் அடைக்கிறார்களோ அவ்வளவு மக்கள் அவர்களுக்கு ஆதரவாக போராடுவார்கள்.

* சாதாரண குடிமக்களும் வீதிக்கு வந்து மக்களுக்கு இருக்கும் உண்மையான சக்தியை அவர்களுக்கு காட்டுவார்கள்.

* சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்காவுக்கு தேவையான சட்டரீதியான ஆதரவை வழங்க திமுக தயாராக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT