தலைமைச் செயலாளர் மாற்றத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றம் செய்வதற்கு எவ்விதமான தர்க்கரீதியான, நியாயமான காரணங்கள் இல்லை.
எந்தப் புகாரும் இல்லாத நிலையில் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை மாற்ற நியாயமான காரணம் இல்லை.
இந்த தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பணி மாறுதலுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடைமுறை தொடங்கி நடைபெற்றாலும் அதனால் அரசாங்கத்தின் செயல்பாடுகள் முடங்கிவிடக்கூடாது.
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக முருகானந்தத்தை மீண்டும் பணியமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை டிஏவிசி-ன் தலைமை இயக்குனராக நியமித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான சந்தீப் மிட்டலை ஊழல் தடுப்புத்துறை தலைவராக நியமிக்க காரணம் என்ன?
இஸ்லாமியர், இடதுசாரிகளை அர்பன் நக்ஸல் என்ற சந்தீப் மிட்டல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு, நடவடிக்கைக்கு ஆளானவர்.
அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கும் டிவிஏசி-க்கு தேர்தல் நடத்துவதில் எவ்விதப் பங்கும் இல்லை.
பாஜக ஆளும் அசாமில் பல்வேறு புகார்கள் கூறப்பட்டாலும் தேர்தல் ஆணையம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தல் பணியுடன் தொடர்பில்லாத அதிகாரியை நியமிக்கவோ, இடமாற்றம் செய்யவோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றுவது ஏன்?
எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கத்தில் மட்டும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பந்தாடுகிகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.